search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில் முனைவோர்கள்"

    • இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்கள் நிறுவி செயல்படுத்த தொடங்கப்பட்டுள்ளது.
    • மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்கள் நிறுவி செயல்படுத்த தொடங்கப்பட்டுள்ளது.

    இதன் நோக்கமானது இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து அங்கு மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும்.

    இத்திட்டத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய https://tnesevai.tn.gov.in (அல்லது) https://tnega.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி வருகிற 30-ந் தேதி இரவு 8 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

    கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகர்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

    விண்ணப்ப தாரர்களுக்குரிய பயனர் மற்றும் கடவுச்சொல் (User Id & Password) விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு மின்னஞ்சல் வழியாக வழங்கப்படும்.

    மேலும், அருகில் உள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை 'முகவரி' ஆண்ட்ராய்டு மொபைல் செயலியை பயன்படுத்தி காணலாம் (அல்லது) https://.tnega.tn.gov.in என்ற இணை யதளத்தில் காணலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்ட விழிப்பு ணர்வு கருத்தரங்கம் நடை பெற்றது.
    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பட்டியல் இனத்தவர் சுமார் 40 முதல் 50 சதவீதம் பேர் வசித்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்ட விழிப்பு ணர்வு கருத்தரங்கம் நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெ க்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசே கரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், டிட்கோ அறக்கட்டளை தலைவர் சுந்தரவடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-

    இந்த திட்டம் பட்டியலின மற்றும் பழங்குடியின தொழிலாளர்களை தொழிலதி பராக ஆக்குவதற்கும், பயன்பெறுவதற்காகவும், பொருளாதாரத்தை உயர்த்து வதற்காகவும், புதிய தொழில் முனைவோராக உருவாக்கு வதற்காகவும் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பட்டியல் இனத்தவர் சுமார் 40 முதல் 50 சதவீதம் பேர் வசித்து வருகின்றனர். குறிப்பாக கல்வராயன் மலைப்பகுதியில் பழங்குடியின மக்கள் 90 சதவிதம் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் இத்தி ட்டதை அறிந்து செயல்ப டவேண்டும். அரசின் இந்த திட்டத்தை முழுமையாக அறிந்து முழு ஈடுபாட்டுடனும், முழு முயற்சியுடனும் செயல்ப டவேண்டும். படித்த இளை ஞர்கள் தங்கள் நண்பர்களுடன் இணைந்து தொழில் தொடங்கு வதற்கு மிகச்சிறந்த ஒன்றாகும். மேலும், அனைத்து வங்கி அலுவலர்களும் புதிதாக தொழில் தொடங்க இருக்கும் தொழில் முனைவோர்களுக்கு தகுந்த வழிகாட்டியாகவும், தொழிலில் உள்ள நுணுக்க ங்களையும் பற்றி பயனாளி களுக்கு தெளிவு படுத்தியும், அவர்களுக்கு தேவையான அறிவுறைகளை வழங்கி, தொழில் முனைவோராக உருவாக்கிட வேண்டும். மேலும், நடப்பு நிதியாண்டில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்ட த்தின்கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.106.05 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.37.13 லட்சம் அரசு மானியத்துடன் கூடிய விண்ணப்பங்கள் வங்கி களுக்கு பரிந்துரை செய்யப்ப ட்டுள்ளது என்று அவர் கூறினார்.

    இதனைதொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த நிதியாண்டில் அரசு திட்டங்களில் சிறப்பாக கடன் வழங்கிய வங்கி மேலாள ர்களுக்கு பாராட்டு கேடய ங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். கருத்தரங்கில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்கள், சங்கத் தலைவர் பிர்மதேவன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, திட்ட அலுவலர் (பழங்குடியினர் நலம்) கதிர்சங்கர், மாவட்ட தாட்கோ மேலாளர் அனந்த மோகன், மாவட்ட தொழில் மைய திட்ட அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட தொழில் மைய உதவி ப்பொறியாளர் சிவநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் வங்கி மேலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகாரி பேச்சு
    • தொழில் நிறுவன உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் புதிய தொழில் தொடங்குவது மற்றும் மேம்படுத்துவது குறித்த சிறப்பு தொழில் முகாம் நடைபெற்றது.

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா முகாமை தொடங்கி வைத்து, தொழில் நிறுவனத்தினர் புதிய தொழில் தொடங்கிட கடன் உதவி கூறி வழங்கிய விண்ணப்பங்களை பெற்றார்.

    அப்போது அவர் பேசியதாவது :-தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கடந்த நிதி ஆண்டில் ரூ.2050 கோடி வருவாய் கிடைக்க பெற்றது. நடப்பாண்டில் ரூ.3 ஆயிரம் கோடி எனக்கு நிர்ணயிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தொழில் முதலீட்டாளர்களுக்கு கடன் உதவி வழங்குவதில் இந்திய அளவில் சிறந்த நிறுவனமாக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் விளங்கி வருகிறது.இந்நிறுவனம் இரண்டு இலக்குகளை நோக்கி தற்போது செயலாற்றி வருகிறது. முதலாவது இந்திய பொருளாதாரத்தில் தொழில்துறையில் தமிழ்நாடு முன்னிலை அடைய புதிய தொழில் நிறுவனங்களை தொழில் தொடங்கிட ஊக்குவிப்பது ஆகும்.

    இரண்டாவது தமிழக முதலமைச்சரின் சிறிய முயற்சியில் தமிழகம் தொழில்துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கிட 2030-ம் ஆண்டிற்குள் 1 ட்ரில்லியன் அளவுக்கு தொழில் முதலீடுகள் தமிழகத்தில் உருவாக்கும் வகையில் தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பது ஆகும்.கடன் உதவிகள் வழங்குவது மட்டுமல்லாமல் தொழில் நிறுவனங்கள் நீடித்த நிலையான தொழில் வளர்ச்சியை அடைந்து நிலையாக தொழில்களை தொடர்ந்து செய்திட உறுதுணையாக இருக்க தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அனைத்து உதவிகளையும் இணைந்து வழங்கி வருகிறது.

    தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முன்னேற்றம் அதிக அளவில் இருந்து வருகிறது. இதனை அவர்கள் உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி பொருட்களை வழங்கவும் பல்வேறு நடவடிக்கைகளை கழகம் மேற்கொண்டு வருகிறது.

    மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த தேவையான உதவிகளை வழங்க புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனம் இயங்கி வருகிறது.

    இதன் கீழ் பல ஆயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதன் மூலம் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்தியாவில் 2 மாநிலங்களில் ராணுவ தளவாட உபகரணங்கள் தயாரிக்க இந்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதில் உத்தரபிரதேசம் மற்றும் தமிழகம் தேர்வாகியுள்ளது.

    தமிழகத்தில் சென்னை, சேலம், ஓசூர், திருச்சி மற்றும் கோவை மண்டலங்களில் இந்த உற்பத்தி பொருட்கள் உற்பத்தி செய்கின்ற மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளது.அதேபோன்று தமிழகம் கனரக வாகன உற்பத்தியில் இந்தியாவிலேயே முன்னிலையில் இருந்து வருகிறது.இதற்கு முக்கிய காரணம் உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் இத்தொழிலில் உற்பத்தியை செய்து வருகின்றன.

    தமிழகம் மிகப் பெரிய அளவில் தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக உள்ளது. பல்வேறு வாய்ப்புகளை தமிழக அரசு திறந்து வைத்துள்ளது.ஆகவே இந்த வாய்ப்புகளை தொழில் தொடங்குவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் முக்கிய நோக்கம் தொழில் தொடங்குபவர்கள் தொழிலில் வெற்றி பெற வேண்டும். அதன் மூலம் மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு தந்து, தொழில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் தொழில் நிறுவனங்கள் பங்காற்ற செய்வதே முக்கிய நோக்கம் ஆகும்.

    ஆகவே நிறுவனங்கள் தொழில் தொடங்கிட கடன் உதவிகள் குறித்தும், உங்களுக்குத் தேவையான அனைத்து ஆலோசனைகளையும், உதவிகளையும் முகாமில் வருகை தந்துள்ள அலுவலரிடம் கேட்டு கடன் உதவிகளை பெற்று தொழில் தொடங்கிட முன் வாருங்கள்.

    ராணிப்பேட்டை மாவட்டம் மேலும் சிறந்த தொழில் நகரமாக மாற்றிட தொழில் முனைவோர்கள், சிறு, குறு‌ மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முன்வந்து தொழில் தொடங்கிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த முகாமில் மண்டல மேலாளர் ரமேஷ், மாவட்டத் தொழில் மையம் மேலாளர் ஆனந்தன், பாரத மிகுமின் நிறுவன பொது மேலாளர் (பொறுப்பு) ராஜீவ் சிங், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக வேலூர் கிளை மேலாளர் கௌரி மற்றும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    புதிய தொழில் முனைவோர்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும் என்று வங்கியாளர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் அன்பழகன் கூறினார்.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் பொருட்டு தாட்கோ மூலம் வங்கிகளுக்கு பரிந்துரை செய்த நிலுவை விண்ணப்பதாரர்கள் மற்றும் வங்கியாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    வாழ்வில் பின்தங்கிய நிலையிலுள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு தாட்கோ மூலம் பல்வேறு பயிற்சி மற்றும் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதில், குறிப்பாக புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்காக தனி நிதி ஒதுக்கீடுகளை வழங்கி அதிகப்படியான மானியங்களுடன் கூடிய வங்கி கடனுதவிகளை வழங்கி வருகிறது.

    அதனடிப்படையில், தையல், ஆயத்த ஆடை தயாரித்தல், உணவகத்தொழில் அரிசி ஆலை, பால்பண்ணை, துறைவாரியாக பண்டக சாலை, சுற்றுலா வாகனம், இரும்புக்கடை, டிஜிட்டல் ஸ்டூடியோ உள்ளிட்ட வருமானம் தரக்கூடிய தொழில்களை மேற்கொள்வதற்கான தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட பகுதி சேவை வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

    கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெறப்பட்ட 89 மனுக்கள் மீது நிலுவை தொடர்பான கலந்தாய்வு கூட்டம் விண்ணப்பதாரர்கள் முன்னிலையில் வங்கியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு தகுதி வாய்ந்த நபர்களுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அலுவலர்களும் மனுதார்கள் நிலையிலிருந்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு புதிய தொழில் முனைவோர்களை அதிக அளவில் உருவாக்கிட உதவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவிச்சந்திரன், தாட்கோ திட்ட மேலாளர் எம்.பி.முரளிதரன் மற்றும் அனைத்து வங்கியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×